ஈரோடு மாவட்டத்தில் 173 மி.மீ மழை

ஈரோடு மாவட்டத்தில் 173 மி.மீ மழை
X

கோப்பு படம்

ஈரோடு மாவட்டத்தில் நேற்று அதிகபட்சமாக வரட்டுப்பள்ளத்தில் 41 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் நேற்று காலை முழுவதும் வானம் மந்தமாக காணப்பட்ட நிலையில், மதியம் 2 மணிக்கு மேல் மழை கொட்டித் தீா்த்தது. மாவட்டம் முழுவதும் 173.0 மி.மீ. மழை பெய்தது.

மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:

வரட்டுப்பள்ளம் - 41.0 மி.மீ

பெருந்துறை - 26.0 மி.மீ

நம்பியூர் - 24.0 மி.மீ

சென்னிமலை - 24.0 மி.மீ

தாளவாடி - 16.0 மி.மீ

கவுந்தப்பாடி - 12.0 மி.மீ

கோபி - 8.0 மி.மீ

மொடக்குறிச்சி - 5.0 மி.மீ

அம்மாபேட்டை - 4.4 மி.மீ

ஈரோடு - 4.0 மி.மீ

பவானி - 2.80 மி.மீ

கொடுமுடி - 2.0 மி.மீ

எலந்தகுட்டைமேடு - 1.6 மி.மீ

குண்டேரிப்பள்ளம் - 1.2 மி.மீ

கொடிவேரி - 1.0 மி.மீ

மாவட்டத்தில் நேற்று மொத்த மழைப்பொழிவு - 173.0 மி.மீ

மாவட்டத்தில் சராசரி மழைப்பொழிவு - 10.17 மி.மீ

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்