ஈராேடு மாவட்டத்தில் நாளை மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

ஈராேடு மாவட்டத்தில் நாளை மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்
சித்தோடு அருகே உள்ள ஸ்ரீ வாசவி கல்லூரியில் நாளை (டிச.23) மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம், (மகளிர் திட்டம்) ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற ஆண், பெண் இருபாலருக்கும் (இளைஞர்களுக்கு) பல்வேறு முன்னணி, நிறுவனங்கள் மூலம், வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கும், பொருட்டு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள, விருப்பமுள்ளவர்கள் நாளை (23.12.2021) காலை 9.00 முதல் மாலை 3.00 வரை பவானி அருகே உள்ள சித்தோடு ஸ்ரீ வாசவி கல்லூரியில் (சுயநிதிப்பிரிவு) நடைபெறும் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

Tags

Next Story