பவானி அருகே கல்பாவி கிராமத்தில் வரும் மே.14ம் தேதி மனுநீதி நாள் முகாம்!

பவானி அருகே கல்பாவி கிராமத்தில் வரும் மே.14ம் தேதி மனுநீதி நாள் முகாம்!
X
ஈரோடு மாவட்டம், பவானி அருகே உள்ள கல்பாவி கிராமத்தில் வரும் மே.14ம் தேதி மனுநீதி நாள் முகாம் நடைபெற உள்ளது.

பவானி அருகே உள்ள கல்பாவி கிராமத்தில் வரும் மே.14ம் தேதி மனுநீதி நாள் முகாம் நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

அரசு மாதந்தோறும் நடத்தக் கூடிய மனுநீதி நாள் முகாம் ஈரோடு மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படும் ஊராட்சியில் மாதந்தோறும் நடைபெற்று வருகிறது. அதன்படி, மே 2025ம் மாதத்திற்கான மனு நீதி நாள் முகாம் பவானி வட்டம் குறிச்சி உள்வட்டம் கல்பாவி கிராமம் கல்பாவி அரசு நடுநிலைப் பள்ளி வளாகத்தில் வரும் மே 14ம் தேதி புதன்கிழமை அன்று காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது.

இம்முகாமில் அனைத்துத் துறை அலுவலர்களும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். எனவே, இம்முகாமில் பொது மக்கள் பங்கேற்று தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன் பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

Next Story
Similar Posts
ஈரோடு: ரூ.3 கோடி சொத்தை அபகரிக்க முயற்சி; திமுக கவுன்சிலர் உள்பட 3 பேர் மீது எஸ்பி ஆபிசில் புகார் மனு!
பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் ஆதிகேசவ பெருமாள் தேரோட்டம்!
சத்தியமங்கலம்: தாளவாடி அருகே சிறுத்தை தாக்கி கன்றுக்குட்டி பலி!
அந்தியூர் அருகே தோட்டத்துக்குள் முகாமிட்டு காட்டு யானை அட்டகாசம்!
மக்கள் மத்தியில் முதல்வர் திட்டம்: ஈரோட்டில் 70 இடங்களில் சிறப்பு முகாம்!
வெள்ளித்திருப்பூரில் ஒற்றை யானையின் ஆதிக்கம்
பவானியில் 1.35 டன் ரேஷன் அரிசி கடத்தலில் ஒருவர் கைது
மாணவர்களுக்கு தமிழ் வளர்ச்சி துறையின் பரிசு மழை
ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் தொழிலாளியின் தொண்டையில் சிக்கிய சேப்டி பின் அகற்றம்!
விபத்து அபாயம் நீங்கியது – ஆபத்தான மரங்கள் அகற்றும் பணி தீவிரம்
மீண்டும் ஏறும் முட்டை விலை – கோழி இறைச்சிக்கும் ரூ.6 உயர்வு
1434ம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீர்வாயம் தொடங்குகிறது
திருச்செங்கோட்டில் 410 பள்ளி வாகனங்கள் திடீர் ஆய்வு