அந்தியூர் அருகே மதுபோதையில் நண்பனின் கழுத்தை நெறித்து கொலை: ஒருவர் கைது‌

அந்தியூர் அருகே மதுபோதையில் நண்பனின் கழுத்தை நெறித்து கொலை: ஒருவர் கைது‌
X

கைதுசெய்யப்பட்ட கார்த்தி.

அந்தியூர் அருகே மதுபோதையில் நண்பனின் கழுத்தை நெறித்துக் கொன்ற ஒருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் தவிட்டுப்பாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் கடந்த 21ம் தேதி, கோபிசெட்டிபாளையம் வெள்ளாளபாளையத்தை சேர்ந்த சதீஸ் (32) என்பவர் மர்மமான முறையில் சாக்கடையில் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து, அந்தியூர் போலீசார் விசாரணை நடத்திவந்த நிலையில், கோபி மொடச்சூரை சேர்ந்த கார்த்தி என்பவரை போலீசார் சந்தகத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர்.

போலீசாரின் விசாரணையில், கார்த்தி மற்றும் சதீஸ் இருவரும் நண்பர்கள் எனவும், கடந்த 21ம் தேதி மது போதையில், தனது பிக்கப் வேனை அவரது நண்பர் சதீஸ், அந்தியூர் கார் ஸ்டேண்ட் அருகே விபத்தை ஏற்படுத்தும் வகையில் ஓட்டி சென்றதால், கார் ஸ்டாண்டில் இருந்த முகமது பாரூக் முருகன் உள்ளிட்ட 3 பேர் நான்கு சக்கர வாகனத்தை பத்திரமாக இருக்கட்டும் எனக் கூறி இருவரையும் திருப்பி அனுப்பி வைத்தனர் எனவும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து தவிட்டுப்பாளைம் டாஸ்மாக் கடையில் மது அருந்திய கார்த்தி மற்றும் அவரது நண்பர் சதீஷ் ஆகியோருக்கு இடையே வாகனத்தை ஓட்டியது குறித்து வாய் தகராறு ஏற்பட்டது. கோபமடைந்தின் உச்சிக்கு சென்ற கார்த்தி அவரது நண்பரான சதீஷை கழுத்தை நெறித்து கொன்று சாக்கடையில் தள்ளி விட்டது போலீசார் விசாரணையில் அம்பலமானது.

இதனையடுத்து கார்த்தியை கைது செய்து பவானி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய அந்தியூர் போலீசார், நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
future ai robot technology