கோபிசெட்டிபாளையம் அருகே மருத்துவமனையில் செல்போன் திருடிய நபர் கைது‌

கோபிசெட்டிபாளையம் அருகே மருத்துவமனையில் செல்போன் திருடிய நபர் கைது‌
X

செல்போன்களை திருடி கைதான ஆறுமுகம்.

கோபிசெட்டிபாளையம் அருகே தனியார் மருத்துவமனையில் செல்போன் திருடிய நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நல்லகவுண்டன்பாளையம் பகுதியில் உள்ள ஒரு பிரபல தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.

இந்த மருத்துவமனையில் செவிலியர்கள் மற்றும் நோயாளிகளின் செல்போன்கள் கடந்த சில நாட்களாக திருடு போனது. இதுகுறித்து, மருத்துவமனை நிர்வாகம் சிசிடிவி கேமரா உதவியுடன், செல்போன் திருடிய நபரை கையும் களவுமாக பிடித்து கோபிசெட்டிபாளையம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய, விசாரணையில் மொடச்சூர் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (வயது 44) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்