சித்தோடு அருகே சட்டவிரோதமாக சாராயம் வைத்திருந்த நபர் கைது‌

சித்தோடு அருகே சட்டவிரோதமாக சாராயம் வைத்திருந்த நபர் கைது‌
X

கைது செய்யப்பட்ட மூர்த்தி.

சித்தோடு அருகே சட்டவிரோதமாக சாராயம் வைத்திருந்த நபரை கைது செய்த போலீசார் 15 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த சித்தோடு காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் சட்டவிரோதமாக நடைபெறும் செயல்கள் குறித்து நேற்று சோதனை நடத்தினர். அப்போது சிந்தன்குட்டை பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் நின்று கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த மூர்த்தி (வயது 33) என்பவரை போலீசார் பிடித்து சோதனை செய்தனர்.

சோதனையில், 18 லிட்டர் கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் குடத்தில் 15 லிட்டர் விஷ சாராயம் வைத்திருந்த தெரியவந்தது. இதையடுத்து, சட்டவிரோதமாக சாராயம் வைத்திருந்த மூர்த்தியை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 15 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!