பவானி அருகே ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவாக இருந்த நபர் கைது‌

பவானி அருகே ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவாக இருந்த நபர் கைது‌
X

பிரகாஷ்

பவானி அருகே ஜாமீனில் வெளியே வந்து நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்துள்ள கோணமூக்கனூர் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2012ம் ஆண்டு பக்கத்து வீட்டில் இருந்த கனகா என்பவரை கொலை செய்த வழக்கில் கைதாகி, ஈரோடு குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இதையடுத்து குற்றவாளி பிரகாஷ் கடந்த 2018ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததில் ஆயுள் தண்டனை 10 ஆண்டு தண்டனையாக குறைக்கப்பட்டதில் நீதிமன்ற ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.இதன் பின்னர் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த பிரகாஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக்கோரி பிடிஆணை பிறப்பிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்த கூலித்தொழிலாளி பிரகாஷை அம்மாப்பேட்டை போலீசார் பிடித்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story