அந்தியூர் அருகே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது‌

அந்தியூர் அருகே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது‌
X

பைல் படம்

அந்தியூர் தவிட்டுப்பாளையம் தென்றல் நகரில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டார்.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் தவிட்டுப்பாளையம் பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக, அந்தியூர் காவல் ஆய்வாளர் மோகன்ராஜுக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில், அப்பகுதியில், உதவி ஆய்வாளர் சண்முகம் மற்றும் போலீசார் நேற்று மாலை அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, தென்றல் நகர் அருகில் உள்ள முட்புதரில் மறைத்து, சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வந்த தவிட்டுப்பாளையம் அண்ணாசாலையை சேர்ந்த சுப்பிரமணியம் 46, என்பவரை கையும் களவுமாக பிடித்தனர். அவரிடமிருந்து 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்றனர். இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்து, அந்தியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!