கடம்பூர் மலைப்பகுதியில் நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தவர் கைது

கடம்பூர் மலைப்பகுதியில் நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தவர் கைது
X

கைது செய்யப்பட்ட பெரியசாமி.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் மலைப்பகுதியில் நாட்டுத் துப்பாக்கி பதுக்கி வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

கடம்பூர் மலைப்பகுதியில் நாட்டு துப்பாக்கி பதுக்கி வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் மலைப்பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக நாட்டுத் துப்பாக்கி பதுக்கி வைத்திருப்பதாக கடம்பூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து கடம்பூர் போலீசார் கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள அத்தியூர் கிராமத்தில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த பெரியசாமி (49) என்பவரது வீட்டில் அனுமதி இன்றி பதுக்கி வைத்திருந்த ஒரு நாட்டு துப்பாக்கி மற்றும் வெடி மருந்துகளை போலீசார் கண்டுபிடித்தனர்.

அதனைத்தொடர்ந்து, துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீசார் பெரியசாமி மீது வழக்குப்பதிந்து கைது செய்து, கோபி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை மாவட்ட சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!