கீழ்வாணி பொன்னுலிங்கேஸ்வரர் கோவிலில் மகாசிவராத்திரி

கீழ்வாணி பொன்னுலிங்கேஸ்வரர் கோவிலில் மகாசிவராத்திரி
X

கீழ்வாணி பொன்னையநகரில் உள்ள பொன்னுலிங்கேஸ்வரர் ஆலயம்.

அந்தியூர் அருகே உள்ள கீழ்வாணி பொன்னுலிங்கேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா நடைபெறுகிறது.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள கீழ்வாணி கிராமம் பொன்னையநகரில் பொன்னுலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு மகாசிவராத்திரியொட்டி , இன்று மாலை 6 மணியளவில் முதல் கால பூஜை , இரவு 10 மணியளவில் 2-ம் கால பூஜை நடக்கிறது.

நாளை (புதன்கிழமை) நள்ளிரவு 12.30 மணியளவில் 3-ம் கால பூஜை, அதிகாலை 5 மணியளவில் 4-ம் கால பூஜை, சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடைபெறுகிறது. காலை 6.30 மணிஅளவில் விநாயகருக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு அபிஷேக, அலங்காரம் செய்யப்படுகிறது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!