கவுந்தப்பாடி அருகே கிணற்றுக்குள் விழுந்த லாரி கிரேன் மூலம் மீட்பு
கிணற்றுக்குள் விழுந்த லாரி கிரேன் மூலம் மீட்கப்பட்ட போது எடுத்த படம்
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள பெரியபுலியூரை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன். இவரது 3 ஏக்கர் தோட்டத்தில் சேவாகவுண்டனுரை சேர்ந்த மாரிமுத்து என்பவர் குத்தகைக்கு வாங்கி கரும்பு பயிரிட்டு இருந்தார். பயிரிடப்பட்டிருந்த கரும்பு அறுவடை செய்யப்பட்டது. சுமார் 10 டன் அளவிலான கரும்பு பாரத்தை லாரி ஒன்று ஏற்றிக் கொண்டு சர்க்கரை ஆலையை நோக்கி தோட்டத்து வழியாக சென்று கொண்டிருந்தது.
அப்போது, தோட்டத்தில் உள்ள தரைமட்ட கிணற்றின் அருகே லாரி சென்றபோது, மண்சரிவு ஏற்பட்டதில் லாரி கிணற்றுக்குள் சாய்ந்தது. இதனை கண்ட லாரி ஓட்டுனர் பரமசிவம் லாரியிலிருந்து குதித்து உயிர் தப்பினார். அதனைத்தொடர்ந்து, லாரி கிணற்றில் முழங்கியது. பின்னர், நேற்று பலமணி நேர போராட்டத்திற்கு பிறகு லாரியானது கிரேன் உதவியுடன் மீட்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu