அந்தியூர் அருகே செங்கல் லோடு ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்து

அந்தியூர் அருகே  செங்கல் லோடு ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்து
X
அந்தியூரில் இருந்து ஆப்பக்கூடல் செல்லும் வழியில் செங்கல் லோடு ஏற்றி சென்ற லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நடு ரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகேயுள்ள தோப்பூரில் இருந்து, ஆப்பக்கூடலுக்கு செங்கல் லோடு ஏற்றிக் கொண்டு, இன்று மதியம் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. தோப்பூரை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் லாரியை ஓட்டி சென்றார். இந்த லாரியில் செங்கல் லோடு ஏற்றி இறக்கும் ஐந்து தொழிலாளர்களும் சென்றனர்.

பிரம்மதேசத்தில் இருந்து ஆப்பக்கூடல் செல்லும் வழியில் வேம்பத்தி ஏரி அருகில் நத்தகாட்டுப்பிரிவு என்ற இடத்தில் லாரி சென்று கொண்டிருந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

எதிர்பாராமல் நடந்த இந்த விபத்தில், லாரியில் பயணம் செய்த அனைவரும் லேசான சிராய்ப்பு காயத்துடன் உயிர் தப்பினார். இதை தொடர்ந்து காயமடைந்த அனைவரும் அந்தியூர் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

Tags

Next Story
சென்னிமலை தைப்பூச தேரோட்டத்திற்கு முன் பரபரப்பான பேனர் சர்ச்சை