ஈரோடு மாவட்டத்தில் 230 தேர்தல் நுண்பார்வையாளர்கள்

ஈரோடு மாவட்டத்தில் 230 தேர்தல் நுண்பார்வையாளர்கள்
X

பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ள 230 தேர்தல் நுண்பார்வையாளர்களுக்கான முதல்நிலை பணி ஒதுக்கீட்டினை ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா கணினி மூலம் சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்தார்.

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, ஈரோடு மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணிக்க 230 தேர்தல் நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் 2024ஐ முன்னிட்டு, ஈரோடு மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள எல்.ஜ.சி, தபால் நிலைய அலுவலர்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கி அலுவலர்கள் என 230 தேர்தல் நுண்பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான முதல்நிலை பணி ஒதுக்கீட்டினை ஈரோடு மாவட்ட தேர்தல் பொது பார்வையாளர் ராஜீவ் ரஞ்சன் மீனா முன்னிலையில், ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கணினி மூலம் சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்தார்.

பின்னர், இதுகுறித்து அவர் கூறியதாவது, இந்திய தேர்தல் ஆணையத்தால் நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, வருகின்ற ஏப்ரல் 19ம் தேதியன்று தமிழ்நாட்டில் முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதன்படி, தேர்தல் நன்னடத்தை விதிகளை கண்காணிக்கும் பொருட்டு பறக்கும் படைக் குழுக்கள், நிலைக் கண்காணிப்புக் குழுக்கள் நியமிக்கப்பட்டு, தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், பல்வேறு தேர்தல் தொடர்பான பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில், ஈரோடு மாவட்டத்தில், வாக்குச்சாவடிகளில் ஈரோடு கிழக்கு தொகுதியில் 237 வாக்குச்சாவடிகளில் 14 வாக்குச்சாவடிகள், ஈரோடு மேற்கு தொகுதியில் 302 வாக்குச்சாவடிகளில் 30 வாக்குச்சாவடிகள், மொடக்குறிச்சி தொகுதியில் 277 வாக்குச்சாவடிகளில் 22 வாக்குச்சாவடிகள், பெருந்துறை தொகுதியில் 264 வாக்குச்சாவடிகளில் 10 வாக்குச்சாவடிகள், பவானி தொகுதியில் 289 வாக்குச்சாவடிகளில் 23 வாக்குச்சாவடிகள், அந்தியூர் தொகுதியில் 262 வாக்குச்சாவடிகளில் 38 வாக்குச்சாவடிகள், கோபிசெட்டிபாளையம் தொகுதியில் 296 வாக்குச்சாவடிகளில் 45 வாக்குச்சாவடிகள், பவானிசாகர் தொகுதியில் 295 வாக்குச்சாவடிகளில் 9 வாக்குச்சாவடிகள் என மொத்தம் உள்ள 2,222 வாக்குச்சாவடிகளில் 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு நாளன்று இந்த 191 பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணிக்க எல்.ஜ.சி, தபால் நிலைய அலுவலர்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கி அலுவலர்கள் 191 நபர்கள் மற்றும் 20 சதவீதம் ரிசர்வ் 39 நபர்கள் உட்பட 230 தேர்தல் நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கான முதல்நிலை பணி ஒதுக்கீடு, கணினி மூலம் சுழற்சி முறையில் ஈரோடு மாவட்ட தேர்தல் பார்வையாளர் அவர்கள் முன்னிலையில், முதல்நிலை பணி கணினி மூலம் சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்து வைக்கப்பட்டது. முதல்நிலை பணி ஒதுக்கீடு செய்யப்பட்ட தேர்தல் நுண்பார்வையாளர்களுக்கு விரைவில் பயிற்சி வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் (ஆவின்) கவிதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ரகுநாதன் (தேர்தல்), வட்டாட்சியர் (தேர்தல்) சிவசங்கர், அலுவலக மேலாளர் (பொது) பாலசுப்பரமணியம், கணினி நிரலாளர் வெங்கடேஷ் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!