அந்தியூர் கால்நடை சந்தையில் ரூ.1 கோடிக்கு கால்நடைகள் விற்பனை

அந்தியூர் கால்நடை சந்தையில் ரூ.1 கோடிக்கு கால்நடைகள் விற்பனை
X

விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட காளை மாடு.

அந்தியூர் வார சந்தையில் இன்று காலை கூடிய கால்நடை சந்தையில் ஒரு கோடி ரூபாய்க்கு கால்நடைகள் விற்பனை செய்யப்பட்டது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வார சந்தை வளாகத்தில் கால்நடைச் சந்தை இன்று வழக்கம்போல் கூடியது. அந்தியூர், வெள்ளித்திருப்பூர், அத்தாணி, கோபி, பர்கூர், பவானி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து சுமார் 5 ஆயிரத்துக்கும் அதிகமான மாடுகள் மற்றும் எருமை மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.

இதில் எருமை மாடுகள் 8 ஆயிரம் ரூபாயிலிருந்து 49 ஆயிரம் ரூபாய் வரையிலும், மாடுகள் 8 ஆயிரம் ரூபாயில் இருந்து 47 ஆயிரம் ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. இன்றைய வர்த்தகத்தில் சுமார் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகள் கொண்டு வரப்பட்ட நிலையில், ஒரு கோடி ரூபாய்க்கு கால்நடைகள் விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் கூறினர்.

ஈரோடு மாவட்டத்திலுள்ள பல்வேறு இடங்களில் இருந்தும், கேரள, கர்நாடக மாநிலங்களிலிருந்தும் வந்திருந்த வியாபாரிகள் மாடுகளை வாங்கி சென்றனர்.

Tags

Next Story