ஈரோட்டில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.106.20 விற்பனை
பைல் படம்.
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் தினமும் உயர்ந்து கொண்டே செல்கிறது. தேர்தல் நடக்கும் சமயத்தில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை அதே நிலையில் நீடிப்பதும், அதன் பின்னர் வழக்கம்போல் விலை உயர்வதுமாக உள்ளது.
பெட்ரோல், டீசல் விலையை பொறுத்தமட்டில் இந்திய எண்ணை நிறுவனம் தினந்தோறும் நிர்ணயம் செய்து வருகிறது. தற்போது வெளிநாடுகளில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதன் எதிரொலியாக சமீபகாலமாக பெட்ரோல், டீசல் விலையும் அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.
ஈரோட்டில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் 105 ரூபாய் 90 காசுக்கு விற்பனையானது. இன்று மேலும் 30 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் பெட்ரோல் 106 ரூபாய் 20 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் நேற்று 102 ரூபாய் 08 காசுக்கு விற்பனையான ஒரு லிட்டர் டீசல் இன்று மேலும் 33 காசுகள் விலை உயர்ந்து 102 ரூபாய் 41 காசுக்கு விற்பனை ஆனது. தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu