கோபிசெட்டிபாளையம் அருகே டி.என்.பாளையத்தில் மது விற்றவர் கைது

கோபிசெட்டிபாளையம் அருகே டி.என்.பாளையத்தில் மது விற்றவர் கைது
X

பங்களாப்புதூர் காவல் நிலையம்.

கோபி அருகே டி.என்.பாளையத்தில் இன்று சட்டவிரோதமாக மது விற்ற நபரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 30 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அடுத்த டி.என்‌.பாளையம் அருகே பங்களாப்புதூர் போலீசார் இன்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது குமரன்கோவில்ரோடு பகுதியில் டி.என்.பாளையம் ஜே.கே.கே. ரோட்டை சேர்ந்த சீனிவாசன் (42) என்பவர் மதுபாட்டில்களை வாங்கி கூடுதல் விலைக்கு விற்றது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

பின்னர், அவரிடமிருந்து 30 மது பாட்டில்களையும், மது விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த 520 ரூபாயையும் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!