தீபாவளி பண்டிகை: ஈரோடு மாவட்டத்தில் மது விற்பனை 3 நாளில் ரூ.26.71 கோடி

தீபாவளி பண்டிகை: ஈரோடு மாவட்டத்தில்  மது விற்பனை 3 நாளில் ரூ.26.71 கோடி
X

மது பாட்டில்கள் (கோப்புப் படம்).

Erode Today News, Erode News - தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் 3 நாட்களில் ரூ.26.71 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Erode Today News, Erode News - தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் 3 நாட்களில் ரூ.26.71 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் 182 டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகையையொட்டி, மது விற்பனை அதிகமாக இருக்கும் என்பதால் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மதுபானங்களா தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டன.

கடந்த 30ம் தேதி ரூ.9 கோடியே 79 லட்சத்து 61 ஆயிரத்து 935க்கு பீர் மற்றும் மது வகைகள் விற்று தீர்ந்தன.

தீபாவளி தினமான 31ம் தேதி ரூ.9 கோடியே 82 லட்சத்து 6 ஆயிரத்து 495க்கும், 1ம் தேதி ரூ.7 கோடியே 9 லட்சத்து 81 ஆயிரத்து 265க்கும் மது, பீர் வகைகள் விற்றன. அதாவது தீபாவளி பண்டிகையையொட்டி ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளில் 3 நாட்களில் ரூ.26 கோடியே 71 லட்சத்து 49 ஆயிரத்து 695க்கு பீர், மது வகைகள் விற்பனையாகி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil