ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.8.38 கோடிக்கு மது விற்பனை

ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.8.38 கோடிக்கு மது விற்பனை
X

பைல் படம்.

முழு ஊரடங்கையொட்டி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் நேற்று ஒரே நாளில் ரூ.8.38 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் 210 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 93 பார் வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. தினமும் ரூ.4 கோடி வரை மதுபானங்கள் விற்பனை நடைபெறும். ஆனால் பண்டிகை காலங்களில் வழக்கத்தை விட அதிக அளவு விற்பனை ஆகி வருகிறது.

தமிழகம் முழுவதும் கொரோனா 3-வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை தடுக்க இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை தமிழக அரசு பிறப்பித்தது. மேலும் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கையொட்டி மளிகை, காய்கறி கடைகள், வணிக வளாகங்கள் தொழிற்சாலைகள் மற்றும் டாஸ்மாக் மதுக்கடைகள், பார்கள் மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக ஈரோட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்களின் கூட்டம் அலைமோதியது. அவர்கள் மதுபாட்டில்களை பைகளில் வாங்கி சென்றனர்.

இதனால் டாஸ்மாக் மதுக்கடைகளில் மதுவிற்பனை அமோகமாக நடைபெற்றது. ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் ரூ.8 கோடியே 38 லட்சத்துக்கு டாஸ்மார்க் விற்பனை ஆனதாக மாவட்ட டாஸ்மாக் பொது மேலாளர் தெரிவித்தார். இது சாதாரண நாட்களை விட கூடுதலாக ரூ.3 கோடி அதிகமாகும்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!