ஈரோடு மாவட்டத்தில் ரூ.8.55 கோடிக்கு மது விற்பனை
கோப்பு படம்
ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 212 மது கடைகள் உள்ளன. பார் வசதியுடன் 100 மதுக்கடைகள் உள்ளன. இந்த மதுக்கடைகளில் சாதாரண நாட்களில் மட்டும் ரூ.4 கோடி வரை மது விற்பனை நடைபெறும். அதேநேரம் பண்டிகை காலங்களில், கூடுதலாக மது விற்பனை நடைபெறும்.
நடப்பாண்டு தீபாவளி பண்டிகையையொட்டி, ஈரோடு மாவட்டத்தில் வழக்கம்போல் மது விற்பனை அமோகமாக நடைபெற்றது. நேற்று முன்தினம் காலை முதல், மாலை வரை விற்பனை மந்தமாகவே இருந்தது. ஆனால், மாலை முதல், இரவு வரை விற்பனை களைகட்டியது. குடிமகன்கள் பிராந்தி, பீர், ஒயின் வகைகளை வாங்கிச் சென்றனர்.
தீபாவளியையொட்டி, நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் ரூ.8 கோடியே 55 லட்சத்துக்கு மது விற்பனையாகி உள்ளதாக மாவட்ட டாஸ்மாக் பொது மேலாளர் தெரிவித்துள்ளார். சாதாரண நாட்களை விட 2 மடங்கு அதிகமாக விற்பனை நடந்து உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அன்று ரூ.8 கோடியே 18 லட்சத்து 50 ஆயிரத்து 710-க்கு மதுவிற்பனை ஆனது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu