பவானியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 2 பேர்கைது

பவானியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 2 பேர்கைது
X
பவானி, கவுந்தப்பாடி பகுதிகளில் சட்ட விரோதமாக கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள ஊராட்சிக்கோட்டை பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக, பவானி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில், போலீசார் அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, பிரவீன்குமார் என்பவர் கூடுதல் விலைக்கு மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து, பிரவீன்குமாரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 6 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

கவுந்தப்பாடி

பவானி அடுத்த கவுந்தப்பாடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கண்ணாடிபுதூர் பகுதியில் சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த செல்வராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 16 மது பாட்டில்களை கவுந்தப்பாடி போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!