அந்தியூரில் சட்டவிரோதமாக மது விற்ற 4 பேர் கைது

அந்தியூரில் சட்டவிரோதமாக மது விற்ற 4 பேர் கைது
X

பைல் படம்

அந்தியூர் சுற்று வட்டாரப்பகுதிகளில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் தலைமையிலான போலீசார் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, தவிட்டுப்பாளையம் பகுதியில், சட்டவிரோதமாக மது விற்ற ராமகிருஷ்ணன் (34), அந்தியூர் ஜி.எஸ்.காலனி பகுதியில் மது விற்பனையில் ஈடுபட்ட சக்திவேல் (வயது 50) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.தொடர்ந்து, சிவசக்தி நகரில் மது விற்பனையில் ஈடுபட்ட கணேசன் (வயது 52), புதுப்பாளையம் பகுதியில் மது விற்பனையில் ஈடுபட்ட சரவணன் (வயது 35) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

நேற்று ஒரேநாளில் வெவ்வேறு இடங்களில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்த, போலீசார் 65 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.மேலும், மது விற்பனையில் ஈடுபட்ட ராமகிருஷ்ணன், சக்திவேல் மற்றும் சரவணன் ஆகிய மூன்று பேரையும் பவானி நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!