அந்தியூர் : சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் கைது

அந்தியூர் :  சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் கைது
X

பைல் படம்

அந்தியூர் அருகே சட்ட விரோதமாக வெவ்வேறு இடங்களில் மது விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்யப்பட்டனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் சிவசக்தி நகரில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்வதாக அந்தியூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாசலபதி தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர்.அப்போது அதே பகுதியை சேர்ந்த தங்கவேல் (62) என்பவர் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. தங்கவேலு கைது செய்த போலீசார், இவரிடமிருந்து 6 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இதேபோல், அந்தியூர் பாலகுட்டை பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட சக்திவேல் என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 10 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர். மேலும், மைக்கேல்பாளையம் நஞ்சமடைகுட்டை பகுதியில் மது விற்பனையில் ஈடுபட்ட தொட்டையன் (32) என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்து 6 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். நேற்று ஒரேநாளில் வெவ்வேறு இடங்களில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்த போலீசார், மொத்தம் 22 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
ai marketing future