அந்தியூர் அருகே சட்டவிரோதமாக மது விற்ற இருவர் கைது

அந்தியூர் அருகே சட்டவிரோதமாக மது விற்ற இருவர் கைது
X

பைல் படம்

அந்தியூர் சுற்று வட்டாரத்தில் வெவ்வேறு இடங்களில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் தலைமையிலான போலீசார், சட்ட விரோதமாக மது விற்பனை தொடர்பான ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது, அந்தியூர் ஜீவா செட்‌ கரட்டுபாளையம் காலனியை சேர்ந்த மாதன் (வயது 57) என்பவர் தனது வீட்டின் பின்புறம் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட கொண்டிருந்தார்.

இதேபோல், அந்தியூர் முதலியார் தெருவை சேர்ந்த சேர்ந்த தனபால் (வயது 51) என்பவர், தவிட்டு பாளையத்தில் மது விற்றுக் கொண்டிருந்தார்.இவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார்,இவர்களிடம் இருந்து மொத்தம் 23 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.இதைத் தொடர்ந்து இவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!