ஆசிரியர்களுக்கு ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் கடிதம்

ஆசிரியர்களுக்கு  ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் கடிதம்
X

ஆசிரியர் தினத்தையொட்டி, ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் ஆசிரியர்களுக்கு கடிதம் எழுதி அனுப்பினர்.

ஆசிரியர் தினத்தையொட்டி, ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் மாணவ, மாணவிகள் அன்புள்ள ஆசிரியருக்கு என்னும் தலைப்பில் கடிதம் எழுதி அனுப்பினர்.

ஆசிரியர் தினத்தையொட்டி, ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் மாணவ, மாணவிகள் அன்புள்ள ஆசிரியருக்கு என்னும் தலைப்பில் கடிதம் எழுதி அனுப்பினர்.

முன்னாள் இந்திய குடியரசுத்தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த தினத்தை ஆசிரியர் தினத்தையொட்டி, ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரி பி.காம் (சிஏ) துறை சார்பில் 'அன்புள்ள ஆசிரியருக்கு' என்னும் தலைப்பில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.


இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் தங்களின் பள்ளி பருவத்தில் அறிவையும், உற்சாகத்தையும் தந்து வாழ்வை வளப்படுத்திய மரியாதைக்குரிய ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தியினை பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கடிதத்தின் மூலம் தெரிவித்தனர்.

இந்தக் கடிதத்தில் அவர்களுக்கு பிடித்தமான ஆசிரியர்களுக்கு நன்றியையும், அவர்களால் வாழ்வில் ஏற்பட்ட திருப்புமுனை முதலான நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர். முடிவில் மாணவ, மாணவிகள் அன்பான ஆசிரியர்களுக்கு எழுதிய கடிதங்கள் அஞ்சல் மூலம் அனுப்பி வைத்தனர்.


இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை துறைத்தலைவர் மங்கையர்க்கரசி மற்றும் துறைசார்ந்த பேராசிரியர்கள் செய்திருந்தனர். முற்றிலும் மாறுபட்ட இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தமைக்காக கல்லூரித் தாளாளர் பி.டி.தங்கவேல் மற்றும் முதல்வர் ஹெச்.வாசுதேவன் ஆகியோர் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

Tags

Next Story