பண்ணாரி அம்மன் கோவில் சாலையோர மதில் சுவர் மீது படுத்திருந்த சிறுத்தை

பண்ணாரி அம்மன் கோவில்  சாலையோர மதில் சுவர் மீது படுத்திருந்த சிறுத்தை
X

சாலையோர மதில் மீது படுத்திருந்த சிறுத்தை.

பண்ணாரி அம்மன் கோவில் அருகே சாலையோரத்தில் உள்ள மதில் சுவர் மீது படுத்திருந்த சிறுத்தையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அடர்ந்த வனப்பகுதியில் புகழ்பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் வளாகத்தின் அருகே சத்தியமங்கலம் செல்லும் சாலையோரம் அமைந்துள்ள மதில் சுவரில் நேற்று இரவு சிறுத்தை படுத்தபடி ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. இதனால், அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். இதனையடுத்து, சிறிது நேரம் மதில் சுவர் மீது ஜாலியாக படுத்திருந்த சிறுத்தை, மெதுவாக எழுந்து, மதில்சுவர் மீது அங்குமிங்கும் நடமாடியது. பின்னர், சிறிது நேரத்திற்கு பிறகு வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது .

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!