சத்தியமங்கலம்: பசுக் கன்றை கடித்து கொன்ற சிறுத்தை புலி

சத்தியமங்கலம்: பசுக் கன்றை கடித்து கொன்ற சிறுத்தை புலி
X

சிறுத்தை தாக்கி பலியான பசுக் கன்று. 

சத்தியமங்கலம் அருகே புளியங்கோம்பையில் சிறுத்தைப்புலி பசுக் கன்றை கடித்து கொன்றது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே புளியங்கோம்பையை சேர்ந்தவர் கூளைமுத்தான். இவருக்கு சொந்தமான தோட்டத்து மாட்டுத்தொழுவத்தில் பசுக் கன்று இறந்து கிடந்தது. இதுகுறித்து, சத்தியமங்கலம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அங்கு, வந்த வனத்துறையினர், கால் தடத்தினை, ஆய்வு செய்ததில் சிறுத்தை புலி கடித்து பசுக் கன்று இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து, அப்பகுதி விவசாயிகள் சிறுத்தை புலியினை கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் அப்பகுதி விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!