டி.என்.பாளையம் அருகே நாயை கடித்துக் கொன்ற சிறுத்தை..!

டி.என்.பாளையம் அருகே நாயை கடித்துக் கொன்ற சிறுத்தை..!
X

பதிவான சிறுத்தையின் கால் தடத்தையும், சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியையும் படத்தில் காணலாம்.

ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த டி.என்.பாளையம் அருகே கிராமப் பகுதிக்குள் நுழைந்த சிறுத்தை நாயை கடித்துக் கொன்றது.

கோபி அடுத்த டி.என்.பாளையம் அருகே கிராமப் பகுதிக்குள் நுழைந்த சிறுத்தை நாயை கடித்து கொன்றது.

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள டி.என்.பாளையம் வனச்சரகத்துக்கு உட்பட்ட கொங்கர்பாளையம் ஊராட்சி கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் கருப்புசாமி. விவசாயியான இவர் வாணிப்புத்தூர் பேரூராட்சி துணைத் தலைவராகவும் உள்ளார். இவருக்கு அதே பகுதியில் தோட்டம் உள்ளது. இவர் நேற்று முன்தினம் இரவு தோட்டத்தில் நாயை கட்டி வைத்துவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இந்தநிலையில், நேற்று காலை தோட்டத்துக்கு சென்றபோது கடித்துக் குதறப்பட்ட நிலையில் நாய் செத்துக் கிடந்தது. உடனே அங்கு பொருத்தி இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்த்தார். அதில் நள்ளிரவு தோட்டத்துக்கு ஒரு சிறுத்தை வருவதும், பின்னர் நாயை கடித்து குதறுவதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர், இதுகுறித்து தகவல் கிடைத்ததும் டி.என்.பாளையம் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்து ஆய்வு செய்தனர். இதனிடையே சிறுத்தை நாயை கடித்துக் குதறும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

காடுகளை அழிப்பது, வனவிலங்குகளை மனிதர்கள் வேட்டையாடி உண்பது போன்ற காரணங்களால் காட்டில் உணவு கிடைக்காமல் சிறுத்தை போன்ற காட்டு விலங்குகள் ஊருக்குள் வருகின்றன.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!