சத்தியமங்கலம் அருகே ஆடுகளை கடித்து கொன்ற சிறுத்தைப்புலி

சத்தியமங்கலம் அருகே ஆடுகளை கடித்து கொன்ற சிறுத்தைப்புலி
X

சிறுத்தைப்புலி கடித்து இழுத்துச் செல்லப்பட்டு இறந்த ஆடு.

சத்தியமங்கலம் அருகே உள்ள சிக்கரசம்பாளையம் பகுதியில், 5 ஆடுகளை சிறுத்தைப்புலி கடித்து கொன்றது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே வனப்பகுதியை ஒட்டியுள்ளது. சிக்கரசம்பாளையம் கிராமம். இங்குள்ளவர்களில் பெரும்பாலானோர் பட்டி வைத்து ஆடுகள் வளர்த்து வருகிறார்கள். வனப்பகுதி அருகே உள்ள தோட்ட பகுதியில் ஆடுகளை மேய்ப்பது வழக்கம்.

இந்தநிலையில், வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு சிறுத்தை சிக்கரசம்பாளையம் கிராமத்துக்குள் புகுந்து முருகன் என்பவருடைய ஆட்டுப்பட்டிக்குள் நுழைந்து, ஐந்து ஆட்டை கடித்து கொன்று கவ்விச்சென்றது. இதுகுறித்து தகவலறிந்து வந்த சத்தியமங்கலம் வனத்துறையினர், கால் தடங்களை ஆய்வு செய்தனர். சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டுமென வனத்துறையினருக்கு, கிராமத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!