ஈரோடு மாவட்டத்தில் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு

ஈரோடு மாவட்டத்தில் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு
X

ஈரோடு நீதிமன்றம்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோர்ட்டுகளில் 2 ஆயிரம் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவையில் போதை பொருள் தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு ஒன்றில் விசாரணையின் போது, வழக்கறிஞர் ஆஜராகாததால் குற்றம் சாட்டப்பட்டவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடபட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழுவின் சார்பில் இன்று ஒரு நாள் மாநிலம் தழுவிய கோர்ட் புறக்கணிப்பு செய்ய முடிவு செய்யப்பட்டிருந்தது. இதன்படி இன்று ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பவானி, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், பெருந்துறை, கொடுமுடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோர்ட்டுகளில் 2 ஆயிரம் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
ai in future agriculture