பர்கூர் கத்திரிமலை பகுதியில் இணைய வழி மருத்துவ சேவை துவக்கம்
இணையதளம் வாயிலாக கத்திரிமலை பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கான புன்னகை என்ற இணையவழி மருத்துவ சேவை மற்றும் கல்வி சேவையினை அமைச்சர் முத்துசாமி துவங்கி வைத்தார்.
ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம், பர்கூர் கத்திரிமலை பகுதி மக்களுக்கான புன்னகை திட்டம் மூலம் இணைய வழி மருத்துவ சேவை, கல்வி சேவை துவக்க நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் மதுபாலன் வரவேற்றார். ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி, அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம், மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புன்னகை திட்டத்தில், இணைய வழி மருத்துவ சேவை, கல்வி சேவையை துவக்கி வைத்து, வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி பேசியதாவது: ஈரோடு மாவட்டம் கடம்பூர், தாளவாடி, பர்கூர் மலைப்பகுதியில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன் பெறும் வகையில், வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் கல்கடம்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், போட்டித் தேர்வுக்கான இலவச இணைய வழி பயிற்சி வகுப்பு இணைய வழியில் துவக்கப்பட்டுள்ளது.
மலைப் பகுதியில், 46 பள்ளி கட்டடங்கள் சீரமைப்புக்காகவும், மலைவாழ் மக்கள் இணைய தளம் வழியாக 'புன்னகை' என்ற இணைய வழி மருத்துவ சேவை, கல்வி சேவைக் காக ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். மலை பகுதியை சேர்ந்த, 26 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. சந்தோஷினி சந்திரா, டி.ஆர்.ஓ., மாவட்ட வன அலுவலர் கவுதம் உட்பட பலர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu