பவானி இ.கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் இணையவழி சேவை மையம் துவக்கம்

பவானி இ.கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் இணையவழி சேவை மையம் துவக்கம்
X

பவானி சிபிஐ அலுவலகத்தில் இணையவழி சேவை மையத்தை எம்பி சுப்பராயன் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.

பவானி சிபிஐ அலுவலகத்தில் சிபிஐ சார்பில் அமைக்கப்பட்ட இணையவழி சேவை மையத்தை திருப்பூர் எம்பி சுப்பராயன் திறந்து வைத்தார்.

ஈரோடு மாவட்டம் பவானியில் இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் கட்சி சார்பில் நடத்தப்படும் இணையவழி பதிவு சேவை மையம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் தொழிலாளர்களின் நலவாரிய பதிவு, புதுப்பித்தல், ஆதரவற்றோர், முதியோர், கைம்பெண், ஓய்வூதிய பதிவுகள் உள்ளிட்ட இணையவழி பதிவுகள் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதனை சிபிஐ கட்சியின் மாநில துணை செயலாளர் சுப்பராயன் எம்பி பதுவக்கி வைத்தார். சிபிஐ மாநில கட்டுப்பாட்டுகுழு உறுப்பினர் குணசேகரன், நகர செயலாளர் ப.மா.பாலமுருகன், எஐடியுசி மாநில செயலாளர் சின்னச்சாமி, சிபிஐ மாவட்ட குழு உறுப்பினர் சந்திரசேகர், ஒன்றிய செயலாளர் கோபால், கட்டிட கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் கந்தசாமி, இளைஞர் பெரு மன்ற நகர தலைவர் பி.முகமது அலி, உள்ளிட்டோர் பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி