ஈரோடு மாநகரில் போக்குவரத்து விதிகளை மீறிய 1,475 வாகன ஓட்டிகள் மீது வழக்கு!

ஈரோடு மாநகரில் போக்குவரத்து விதிகளை மீறியதாக கடந்த மாதம் 1,475 வாகன ஓட்டிகள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து ரூ.1.41 லட்சம் அபராதம் விதித்தனா்.
ஈரோடு தெற்கு போக்குவரத்து காவல் நிலைய போலீசார் கடந்த மாதம் ஈரோடு ஆட்சியா் அலுவலகம், மூலப்பாளையம் சந்திப்பு, கொல்லம்பாளையம், அரசு தலைமை மருத்துவமனை ரவுண்டானா, பன்னீர்செல்வம் பூங்கா சந்திப்பு, காளைமாட்டு சிலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, மதுபோதையில் வாகனம் ஒட்டிய 134 பேர் மீதும், போக்குவரத்து சிக்னலை மீறியதாக 3 பேர் மீதும். இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்ற 827 பேர் மீதும், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் இயக்கிய 8 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்தனர்.
அதேபோல், வாகன காப்பீடு இல்லாமல் வாகனம் ஓட்டிய 115 பேர் மீதும், செல்போன் பேசியபடி வாகனம் இயக்கிய 39 பேர் மீதும், வாகனம் உரிமம் இல்லாமல் இயக்கிய 109 பேர் மீதும் மற்றும் இதர வழக்குகள் என மொத்தம் 1,475 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேலும் அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 41 ஆயிரத்து 400 அபராதம் வசூல் செய்யப்பட்டது. இதுதவிர, மதுபோதையில் வாகனம் ஒட்டிய 57 பேரின் ஓட்டுநர் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu