மொழிப்போர் தியாகிகள் தினம்: கோபியில் அதிமுகவினர் மலர்தூவி மரியாதை

மொழிப்போர் தியாகிகள் தினம்: கோபியில்  அதிமுகவினர் மலர்தூவி மரியாதை
X

மொழி போர் தியாகிகளுக்கு மரியாதை செலுத்திய செங்கோட்டையன் எம்எல்ஏ. 

கோபிச்செட்டிப்பாளையத்தில் ஏ.கே.செங்கோட்டையன் தலைமையில் அதிமுகவினர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

தமிழகத்தில் இந்தி எதிர்ப்புக்கு எதிராக போராடி வீரமரணம் அடைந்தவர்களை நினைவு கூறும் விதமாக ஆண்டு தோறும் ஜனவரி 25ம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, மொழிப்போர் தியாகிகள் தினமான இன்று கோபிச்செட்டிப்பாளையம் புதுப்பாளையத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட மாணவரணி சார்பில், முன்னாள் அமைச்சரும், தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான செங்கோட்டையன் தலைமையில், தியாகிகளுக்கு மலர் தூவி வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரமணிதரன், ஈஸ்வரன், மாவட்ட மாணவரணி செயலாளர் குருராஜ், நகர் செயலாளர் பிரினிவ் கணேஷ், கோபி நகர மாணவரணி செயலாளர் செல்வம், நகர மகளிரணி செயலாளர் தமிழ்செல்வி, கோபி ஒன்றிய செயலாளர் வேலுமணி, நம்பியூர் ஒன்றிய செயலாளர் சுப்ரமணி உட்பட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!