திம்பம் மலைப்பகுதியில் மண்சரிவு

X
மண் சரிவு ஏற்பட்ட பகுதி.
By - S.Gokulkrishnan, Reporter |7 Dec 2021 3:45 PM IST
தொடர் மழையால் திம்பம் மலைப்பாதையில் 27-வது கொண்டை ஊசி வளைவு அருகே மண்சரிவு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம் தாளவாடி சுற்று வட்டார பகுதியில் தொடர் மழை பெய்து வந்தது. இந்நிலையில் நேற்று இரவு திம்பம் மலைப்பாதை 27-வது கொண்டை ஊசி வளைவு அருகே திடீரென மண்சரிவு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஆசனூர் போலீசார் மண்சரிவு ஏற்பட்டுள்ள இடத்தில் தடுப்புகள் அமைத்தனர். மண்சரிவால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படவில்லை.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu