சலங்கபாளையம் பேரூராட்சியில் நில ஆக்கிரமிப்பு: திமுக பிரமுகர் மீது பொதுமக்கள் புகார்

சலங்கபாளையம் பேரூராட்சியில் நில ஆக்கிரமிப்பு: திமுக பிரமுகர் மீது பொதுமக்கள் புகார்
X
பொதுமக்கள் தேர்தலை புறக்கணிப்பதாக பதாகை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.
பொது நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த திமுக பிரமுகர் மீது புகார் கூறி, பொதுமக்கள் நகர்புற உள்ளாட்சி தேர்தல் புறக்கணிப்பு போராட்டம்.

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள சலங்கபாளையம் பேரூராட்சி கிருஷ்ணாபுரம் 9வது வார்டு தனி வார்டாக ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில், அம்பேத்கர் வாசக சாலை என்ற பெயரில் 8 சென்ட் பொது இடம் உள்ளது. இந்த அம்பேத்கர் வாசக சாலையானது தமிழக அரசால் ஆதி திராவிடர் நலத்துறையினால் பிரித்து வழங்கப்பட்ட பொது நிலமாகும்.


இந்த நிலத்தை ஒட்டி அமைந்துள்ள குடியிருப்பு வீடுகளின் பட்டாவில் அம்பேத்கர் வாசகர் சாலை பொதுநிலம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலத்தை 20 வருடங்களுக்கு முன்பு, காஞ்சிக்கோவில் பகுதியை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி என்ற திமுக பிரமுகர் பொய்யான அறிக்கைகள் மூலம், நிலத்தை வீரன் மனைவி முருகம்மாள், பழனிச்சாமி மனைவி சாந்தி என்ற பெயருக்கு மாற்றி பத்திரபதிவு செய்துள்ளார்.

இதனை, அறிந்த அப்பகுதி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனார். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், அப்பகுதியில் பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகம் முன்பு, நகர்புற உள்ளாட்சி தேர்தலை பதாாகை எந்தி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பொதுமக்கள் அரசையும், பத்திர பதிவு துறையையும் ஏமாற்றி நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story