ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரி மாணவிகளுக்குப் பாராட்டு

ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரி மாணவிகளுக்குப் பாராட்டு
X

தங்கம், வெள்ளிப் பதக்கம் வென்ற மாணவிகளை ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரி தாளாளர் தங்கவேல், முதல்வர் வாசுதேவன் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்த போது எடுத்த படம்.

மாநில அளவிலான டிரியோ டைனமிக், ரிதமிக் ஜிம்னாஸ்டிக் பிரிவுகளில் தங்கம், வெள்ளிப்பதக்கங்கள் பெற்ற ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரி மாணவிகளை கல்லூரி தாளாளர், முதல்வர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

மாநில அளவிலான டிரியோ டைனமிக், ரிதமிக் ஜிம்னாஸ்டிக் பிரிவுகளில் தங்கம், வெள்ளிப்பதக்கங்கள் பெற்ற ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரி மாணவிகளை கல்லூரி தாளாளர், முதல்வர் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

ஈரோடு நஞ்சனாபுரம் கொங்கு கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் மாநில அளவிலான பெண்களுக்கான டிரியோ டைனமிக், தமிழ்நாடு ரிதமிக் ஜிம்னாஸ்டிக் பிரிவுகளில் சிறப்பாகப் பங்கேற்றுத் தங்கம் வெள்ளிப் பதக்கங்களைப் பெற்றுள்ளனர்.

மாநில அளவில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஈரோடு வ.உ.சி., மைதானத்தில் நடைபெற்ற Ribbonல் இளங்கலை முதலாமாண்டு வணிக நிர்வாகம் (I BBA) பயிலும் மாணவி பூவிழி ஒரு தங்கமும் சீனியர் பிரிவில் பந்து, கிளப், ஹூப்ஸ் போட்டியில் மூன்று வெள்ளி, அனைத்து வயதினருக்கான தமிழ்நாடு Rhythmic Gymnastics Trio Dynamic, Balance and Combain பிரிவில் இளங்கலை (B.B.A) பயிலும் மாணவி கலைச்செல்வி மூன்று தங்கம் வென்றார்.

கல்லூரி உடற்கல்வி இயக்குநர் கா.மு.பிரகாஷ் ராஜ் மற்றும் துணை உடற்கல்வி இயக்குநர் இரா.ஜெகதீஸ்வரி ஆகியோர் உறுதுணையுடன் வெற்றி பெற்ற வீராங்கனைகளை கல்லூரியின் முதல்வர் முனைவர் எச்.வாசுதேவன் மற்றும் கல்லூரியின் தாளாளர் பி.டி.தங்கவேல் ஆகியோர் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

Tags

Next Story
latest agriculture research using ai