கோபி: கொளப்பலூர், கெட்டிச்செவியூர் பகுதிகளில் நாளை மின் விநியோகம் நிறுத்தம்

பைல் படம்
Power Cut Tomorrow - ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொளப்பலூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக நாளை (செவ்வாய்க் கிழமை) நடைபெற உள்ளது. இதனால், யூனிட்டிநகர், காமராஜர் நகர், செட்டியாம்பாளையம், மல்லநாயக்கனூர், அங்கம்பாளையம், சாணார்பாளையம், லிங்கப்பகவுண்டன்புதூர், போக்குவரத்து நகர், குமரன்காலனி, அம்மன் கோவில்பதி, கொளப்பலூர், சமத்துவபுரம், அயலூர், தாழ்குனி, சொக்குமாரிபாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், கெட்டிச்செவியூர் துணை மின் நிலைய பகுதியில் நாளை (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் கெட்டிச்செவியூர், வாகரைப்புதூர், பள்ளிபாளையம், காளியப்பம் பாளையம், ஆவாலாம்பாளையம், நிச்சாம் பாளையம், தோரணவாவி, ராசா கவுண்டன்பாளையம், தோட்டத்துபாளையம், சூரியப்பம்பாளையம், நல்லிகவுண்டன்பாளையம், மேட்டுப்பாளையம், திருமாநாதம்பாளையம், குட்டையபாளையம், சிறுவலூர், தாண்டாகவுண்டன்பாளையம், லட்சுமாய்புதூர் தண்ணீர்பந்தல்பாளையம், பூச்சநாயக்கன்பாளையம், கரிச்சிபாளையம் ஆயிபாளையம், பதிப்பாளையம், ஊஞ்சப்பாளையம் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது. தகவலை கோபி மின்வாரிய செயற்பொறியாளர் சங்கர் தெரிவித்துள்ளார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu