/* */

கொடிவேரி அணை ஒரு மாதத்திற்கு பிறகு திறப்பு; சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

கோபி அருகே உள்ள கொடிவேரி அணைக்கு ஒரு மாதத்திற்குபின் சுற்றுலா பயணிகள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் மக்கள் மகிழ்ச்சி

HIGHLIGHTS

கொடிவேரி அணை ஒரு மாதத்திற்கு பிறகு திறப்பு; சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
X

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கொடிவேரி அணை

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கொடிவேரி அணையானது சுமார் 550 ஆண்டுகளுக்கு முன் பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணையாகும். சுமார் 15 அடி உயரத்தில் இருந்து அருவி போல் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ ஈரோடு மாவட்டத்தில் இருந்து மட்டுமின்றி திருப்பூர், கோவை, நாமக்கல் என பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அரசு விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வருவது வழக்கம். இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல அரசு தடை விதித்து இருந்தது.

இதனால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் மூடப்பட்டது. தற்போது, கொரோனா பாதிப்பு குறைந்து வருவதையொட்டி, அரசு படிப்படியாக தளர்வுகளை அறிவித்தது. அவ்வகையில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களை பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி, கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும் மற்றும் கண்டு களிக்கவும் ஞாயிற்றுக்கிழமை முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தடுப்பணை திறக்கப்பட்டதால் உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் பலர் திரண்டு வந்து அணையில் குளித்து மகிழ்ந்தனர்.

Updated On: 13 Feb 2022 10:00 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. கோவை மாநகர்
    11 ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த கோவை
  3. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை இழந்தவர்களுக்கு அவர்களின் பிறந்தநாளில் செய்ய வேண்டியது என்ன?
  4. மாதவரம்
    புழல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து
  5. சேலம்
    மேட்டூர் அணை நீர்வரத்து 138 கன அடியாக அதிகரிப்பு
  6. லைஃப்ஸ்டைல்
    காதல் நிறைந்த வாழ்க்கைப் பயணம்! கணவருக்கு திருமண ஆண்டுவிழா...
  7. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அன்பான ஆண்டுவிழா வாழ்த்துகள்!
  8. லைஃப்ஸ்டைல்
    அம்மாவின் பிறந்தநாளில், அன்பின் வெளிப்பாடுகள்!
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,316 கன அடியாக அதிகரிப்பு
  10. திருநெல்வேலி
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்