கொடிவேரி அணை வரும் 9ம் தேதி முதல் திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

கொடிவேரி அணை வரும் 9ம் தேதி முதல் திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
X

கொடிவேரி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதை படத்தில் காணலாம்.

கொடிவேரி அணை வரும் 9ம் தேதி முதல் திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவர் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் திறக்கப்படும் தண்ணீர் கொடிவேரி தடுப்பணை வழியாக, பவானி ஆற்றில் வெளியேறுகிறது. தடுப்பணையில் இருந்து, தண்ணீர் வெளியேறும் பகுதியில் 36 இரும்பு ஷட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளது. அணையில் ஆண்டு முழுவதும் தண்ணீர் இருப்பதால் இரும்பு ஷட்டர்கள் பழுதடைந்து விடுகிறது. இதனால் பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஷட்டர்கள் மாற்றப்படும்.

இந்நிலையில், இரும்பு ஷட்டர்கள் பழுதடைந்ததை தொடர்ந்து, பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு அதனை மாற்ற அரசு உத்தரவிட்டது. அதனைத்தொடர்ந்து, கடந்த மாதம் 29ம் தேதி முதல் கொடிவேரி அணை மூடப்பட்டு இரும்பு ஷட்டர்கள் மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதனால், அணைக்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டது.

மே 4ம் தேதிக்குள் 36 இரும்பு ஷட்டர்களுக்கும் மாற்றப்பட்ட பின்னரே, சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், பணிகள் முடிவடையாத நிலையில், வரும் 8ம் தேதியன்று பணிகள் முடிவடைய உள்ளதால், 9ம் தேதி (திங்கட்கிழமை) முதல் அணை திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதிக்கப்படுவர் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!