கொடிவேரி அணையில் வெள்ளப்பெருக்கு

கொடிவேரி அணையில் வெள்ளப்பெருக்கு
X
கொடிவேரி அணை.
கனமழை காரணமாக கொடிவேரி அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

கோபி அருகே கொடிவேரி அணையானது, பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டு உள்ளது. தற்போது, நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 104.50 அடியாக உயர்ந்து உள்ளது. இன்று மாலை 4 மணி நிலவரப்படி பவானிசாகர் அணையிலிருந்து ஆற்றிக்கு 4,800 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. இதன் காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து கொடிவேரி அணை பகுதிக்குள் சுற்றுலா பயணிகள் நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!