அந்தியூரில் டூவிலர்கள் மோதிக் கொண்ட விபத்தில் மேலும் ஒருவர் பலி

அந்தியூரில் டூவிலர்கள் மோதிக் கொண்ட விபத்தில் மேலும் ஒருவர் பலி
X

பைல் படம்.

அந்தியூரில் இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில், மேலும் ஒருவர் உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பருவாச்சி அம்மன்பாளையத்தை சேர்ந்தவர் ராஜகோபாலும், அவரது நண்பர் பழனிச்சாமியும், நேற்று இரவு, அந்தியூரில் இருந்து பருவாச்சி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

கந்தாம்பாளையம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, எதிரில் ஒன்றன் பின் ஒன்றாக வந்த இரண்டு இருசக்கர வாகனங்களும், ராஜகோபால் சென்ற வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில், தலையில் பலத்த ரத்தக் காயம் ஏற்பட்டு, ராஜகோபால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இவருடன் வந்த பழனிச்சாமி படுகாயமடைந்த நிலையில், கோவை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பழனிச்சாமி இறந்தார். மேலும், விபத்தில் காயமடைந்த கண்ணடிபாளையத்தை சேர்ந்த 6 பேர் அந்தியூர் மருத்துவமனைகளும் ஈரோடு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது சம்பந்தமாக அந்தியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்