கவுந்தப்பாடி ஸ்ரீராஜராஜேஸ்வரி புதுமாரியம்மன் கோவில் திருவிழா

கவுந்தப்பாடி ஸ்ரீராஜராஜேஸ்வரி புதுமாரியம்மன் கோவில் திருவிழா
X

கோவில் திருவிழாவில் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்.

கவுந்தப்பாடி ஸ்ரீராஜராஜேஸ்வரி புதுமாரியம்மன் கோவில் திருவிழாவில் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்.

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த புகழ்பெற்ற கவுந்தப்பாடி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி புதுமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் வெகுவிமரிசையாக திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் பூச்சாட்டுதலுடன் கோவில் திருவிழா கடந்த வாரம் தொடங்கியது. இந்த நிலையில், இன்று கோவில் திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்ற 20 அடி நீள அளவுள்ள வேல் அலகு குத்தியும், முதுகில் கத்தியால் குத்தப்பட்ட பறவை அலகு குத்தியும், முதுகில் குத்தப்பட்ட அலகில் தேர் இழுத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

திருவிழாவில், கவுந்தப்பாடி மாரியம்மன் கோவில் சாலை, பி.மேட்டுப்பாளையம் சாலை மற்றும் பவானி சாலையில் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் பேருந்து நிலையம், நால்ரோடு வழியாக ஸ்ரீ ராஜராஜேஸ்வரி புதுமாரியம்மன் கோவில் வரை அலகு குத்தி வந்தவர்களை பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தண்ணீர் ஊற்றி வரவேற்றனர். 20 அடி நீள அளவுள்ள வேல் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தியதால், பிரதான சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. மேலும், திருவிழாவில் அசம்பாவித்தை தடுக்கும் வகையில், கவுந்தப்பாடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!