ஈரோடு பூம்புகாரில் கார்த்திகை தீபத் திருவிழா கண்காட்சி மற்றும் விற்பனை

ஈரோடு பூம்புகாரில் கார்த்திகை தீபத் திருவிழா கண்காட்சி மற்றும் விற்பனை
X

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, ஈரோடு பூம்புகார் விற்பனை நிலையத்தில் விளக்குகள் கண்காட்சி மற்றும் விற்பனையை இந்து சமய அறநிலையத்துறை ஈரோடு மண்டல இணை ஆணையர் பரஞ்சோதி ரிப்பன் வெட்டி துவக்கி வைத்த போது எடுத்த படம்.

ஈரோடு மேட்டூர் சாலையில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில், கார்த்திகை தீப விளக்குகள் கண்காட்சி மற்றும் விற்பனை துவங்கியது.

ஈரோடு மேட்டூர் சாலையில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில், கார்த்திகை தீப விளக்குகள் கண்காட்சி மற்றும் விற்பனை துவங்கியது.

ஈரோடு ஜிஎச் ரவுண்டானா மேட்டூர் சாலையில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் கார்த்திகை தீபத் திருவிழாவினை முன்னிட்டு விளக்குகள் கண்காட்சி மற்றும் விற்பனை நேற்று (நவ.28) துவங்கியது. இந்தக், கண்காட்சியை இந்து சமய அறநிலையத்துறை ஈரோடு மண்டல இணை ஆணையர் பரஞ்சோதி ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். இக்கண்காட்சியானது, வரும் டிச‌.18ம் தேதி வரை நடைபெறுகிறது.

இக்கண்காட்சியில் வீடுகள், கோயில்கள், அலுவலகங்கள் கல்வி நிறுவனங்களுக்கு பயன்படும் வகையில் பூம்புகார் உற்பத்தி நிலையங்களான நாச்சியார்கோயில் மதுரை, வாகைகுளம் ஆகிய இடங்களில் தயாரிக்கப்பட்ட உயர் தரமான பித்தளை விளக்குகள் 4 அங்குலம் முதல் 6 அடி வரையிலான அன்னம் குத்து விளக்குகள் கிளை விளக்குகள், கிளி விளக்குகள், மங்கள தீபம்,மலபார் விளக்குகள், தூண்டா மணி விளக்குகள், பாலாடை விளக்குகள் இடம் பெற்றுள்ளன.


மேலும், பித்தளை தொங்கு விளக்குகள், சங்கு, சக்கர தொங்கு விளக்குகள், அன்னம் தொங்கு விளக்குகள் விநாயகர், லக்ஷ்மி பாலாஜி காமாட்சி அஷ்டலக்ஷ்மி பிரதோஷ விளக்குகள் குபேர விளக்குகள் நந்தா தீபம் யானை விளக்குகள், முருகன் விளக்கு, ஐந்து சர விளக்குகள், இரண்டு தகழி விளக்கு, சூடத்தட்டு, கற்பூர ஆர்த்தி டேபிள் விளக்கு குஜராத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட வண்ணமிகு வேலைப்பாடுகளுடன் கூடிய சிறிய அகல் விளக்குகள், சூடுகளிமண்ணால் செய்யப்பட்ட உருளி விளக்கு, பாவை விளக்கு இன்னும் பல விளக்குகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இவ்வருடம் புது வரவாக தாமரை விளக்கு, பஞ்சமுக தாமரை விளக்கு ரோஜா பூ விளக்கு, பித்தளை மண்ணெண்ணய் விளக்கு, வாத்து வடிவ நந்தா விளக்கு, ஒரு முக விளக்கு, மூடியுடன் ஆத்ம விளக்கு, வாராகி விளக்கு, ஓம் மற்றும் வேல் உள்ள விளக்கு மற்றும் பரிசு அளிக்கக்கூடிய விளக்குகள் விற்பனை மற்றும் கண்காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன. இவ்விளக்குகள் குறைந்த பட்சமாக ரூ.15 முதல் ரூ.1,10,000 வரையிலான விளக்குகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இக்கண்காட்சியில் குறிப்பிட்ட விளக்குகளுக்கு 10 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது அது சமயம் அனைத்து கடன், பற்று அட்டைகளுக்கு எவ்வித சேவை கட்டணமின்றி ஏற்றுக்கொள்ளப்படும் என்று பூம்புகார் மேலாளர் கு.அருண் தெரிவித்துள்ளார்.

Next Story
உடல் ஆரோக்கியத்திற்கும் அழகின் ரகசியத்துக்கு  இந்த பால் தான் காரணமா..?