கள்ளக்குறிச்சி விவகாரம்: வாட்ஸ்அப் மூலம் போராட முயன்ற 2 பேர் கைது

கள்ளக்குறிச்சி விவகாரம்: வாட்ஸ்அப் மூலம் போராட முயன்ற 2 பேர் கைது
X

பைல் படம்

Kallakurichi District News- கள்ளக்குறிச்சி மாணவியின் இறப்புக்கு நீதி கேட்டு வாட்ஸ் அப் மூலம் போராட்டம் நடத்த முயற்சித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Kallakurichi District News- கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி இறந்த சம்பவத்தை தொடர்ந்து, ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் குறிப்பிட்ட பெயரை கொண்ட வாட்ஸ்-அப் குழு உருவாக்கப்பட்டு உள்ளது. அதில் ஸ்ரீமதிக்காக சேலம் ரயில்வே சந்திப்பில் ஒன்று திரளுவோம் நீதி கேட்போம் என்று பதிவுகளை போட்டுள்ளனர். இதுகுறித்து கொடுமுடி போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

விசாரணையில், கொடுமுடி அருகே உள்ள சின்னாக்கண்டனூரை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் அசோக் (19) , ராமசாமி மகன் ஸ்ரீதர் (22) ஆகிய இருவரும் போராட்டம் குறித்து பதிவுகளை தொடர்ந்து போட்டு வந்துள்ளது தெரியவந்தது. இதனையடுத்து வாட்ஸ்-அப் மூலம் வன்முறை தூண்டும் வகையில் செயல்பட்ட இருவரையும் போலீசார் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story