குடும்ப தகராறில் வாய்க்காலில் குதித்து ஆண் தற்கொலை

குடும்ப தகராறில் வாய்க்காலில் குதித்து ஆண் தற்கொலை
X

பைல் படம்.

குறிச்சியை சேர்ந்த ஆண் ஒருவர் குடும்ப தகராறில் வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை.

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த குறிச்சி பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இவரது மனைவி சுந்தராம்பாள். சம்பவத்தன்று, இருவருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்படவே சுந்தராம்பாள் கணவர் முருகேசனை கண்டித்துள்ளார். இதனால் கோபமடைந்த முருகேசன் இருசக்கர வாகனத்தில் குறிச்சி பகுதியில் உள்ள வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து, உறவினர்கள் வாய்க்காலில் தேடியும், முருகேசன் கிடைக்காத நிலையில், இன்று குறிச்சி மேட்டூர் மேற்கு கரை வாய்க்காலில் முருகேசன் சடலமாக மீட்கப்பட்டார். தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த அம்மாபேட்டை போலீசார் சடலத்தை கைப்பற்றி அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்