பண்ணாரி கோவில் குண்டம் திருவிழாவில் போலீசாரை கண்டித்து செய்தியாளர்கள் தர்ணா போராட்டம்!

பண்ணாரி கோவில் குண்டம் திருவிழாவில் போலீசாரை கண்டித்து செய்தியாளர்கள் தர்ணா போராட்டம்!
X
ஈரோடு மாவட்டம் பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில் செய்தி சேகரிக்க செய்தியாளர்களை கோவிலுக்குள் விட மறுத்து, அவமதித்து பேசிய போலீசாரை கண்டித்து, செய்தியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில் செய்தி சேகரிக்க செய்தியாளர்களை கோவிலுக்குள் விட மறுத்து, அவமதித்து பேசிய போலீசாரை கண்டித்து, செய்தியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரியில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில் விழாவில் செய்தி சேகரிக்கும் பணிக்காக 50க்கும் மேற்பட்ட செய்தியாளர்கள் நேற்று நள்ளிரவு வந்தனர்.

ஈரோடு மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர்களுடன் ஈள்ளே செல்ல வேண்டுமென கூறி, அவர்களுக்கு அனுமதி மறுத்ததால் போலீசாரிடம் வாக்குவாதம் செய்த அனைவரும் கோவில் வளாகத்தின் முன்பகுதியை அடைந்தனர்.


தொடர்ந்து, அங்கிருந்து குண்டம் இறங்கும் இடத்திற்கு செல்லும் வழியில் இருந்த போலீசார் செய்தியாளர்களை நிற்க வைத்துவிட்டு உயர் அதிகாரிகளை வந்து பார்த்து அனுமதி பெற்ற பின் உள்ளே விடுவதாக கூறினர்.

இதனால், சோர்வடைந்த செய்தியாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து உள்ளே விட மறுத்தால் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறினர். இதனை கண்காணிப்பு மேடையிலிருந்து பார்த்த பெண் போலீஸ் அதிகாரி அவரிடமிருந்த மைக்கில் செய்தியாளர்கள் பார்த்து ஓவராக சீன் கிரியேட் பண்ணாதீர்கள் என பேசினார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த முப்பதுக்கும் மேற்பட்ட செய்தியாளர்கள் கோவில் நுழைவாயிலில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு கம்பிகளுக்கு எதிரில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து, 15 நிமிடம் நடைபெற்ற போராட்டத்திற்கு பிறகு போலீசார் செய்தியாளர்களை உள்ளே அனுமதித்தனர். இருந்தபோதிலும், செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை ராணுவ முகாமிற்குள் அனுப்புவது போல ஆயிரம் கேள்விகளை கேட்ட துன்புறுத்திய போலீசார், மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகளின் செயல் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துவதாக இருந்தது.

ஆனால், குண்டம் இறங்கும் பகுதியை சுற்றி எந்த துறையிலும் இல்லாத நூற்றுக்கணக்கான நபர்கள் செல்போன் மற்றும் கேமராவில் போட்டோ எடுத்த படியே செய்தியாளர்களை செய்தி சேகரிக்க இடையூறாக நின்றனர்.

வழக்கம் போல் செய்தியாளர்கள் நிற்பதற்கு கூட இடம் இல்லாமல் அங்கிருந்த கம்பத்தை பிடித்து அந்தரத்தில் தொங்கிய படியே வீடியோ மற்றும் போட்டோவை எடுத்தனர்.

Next Story