கோபிசெட்டிபாளையம் அருகே கோவில் பூட்டை உடைத்து நகை கொள்ளை

கோபிசெட்டிபாளையம் அருகே கோவில் பூட்டை உடைத்து நகை கொள்ளை
X

கோவில் அலுவலகத்தில் உள்ள பீரோ..

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பொலவக்காளிபாளையம் மாரியம்மன் கோவில் பூட்டை உடைத்து 3 பவுன் நகையை திருடப்பட்டது.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பொலவக்காளிபாளையம், கோபி -ஈரோடு சாலையில் மாரியம்மன் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலுக்கு ஒத்தகுதிரையை சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவர் பூசாரியாக உள்ளார்.

சுந்தரமூர்த்தி நேற்று வழக்கம்போல் கோவில் மற்றும் கோவில் அலுவலகத்தை பூட்டிவிட்டுச் சென்றுள்ளார். இன்று காலை வந்து பார்த்த போது, கோவில் கதவு மற்றும் கோவில் அலுவலகத்தில் இருந்து பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர், கோபி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் மேற்கொண்ட விசாரணையில், 2 சவரன் எடையுள்ள சாமி தாலி உட்பட 3 பவுன் நகை கொள்ளை போனது தெரியவந்தது. இதுகுறித்து, கோபிசெட்டிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags

Next Story