அந்தியூரில் ஜேசிபி இயந்திர உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்!

அந்தியூரில் ஜேசிபி இயந்திர உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்!
X
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் ஜேசிபி இயந்திர உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தியூரில் ஜேசிபி இயந்திர உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

டீசல், ஆயில், உதிரி பாகங்கள், இன்சூரன்ஸ், சாலை வரி மற்றும் வாகனங்களின் விலை உயர்வு காரணமாக ஜேசிபி இயந்திரங்களுக்கான வாடகை தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஈரோடு மாவட்டம் அந்தியூரில் ஜேசிபி இயந்திர உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்துக்கு அந்தியூர் தாலுகா எர்த் மூவர்ஸ் உரிமையாளர் நல சங்க தலைவர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். வேலைநிறுத்தம் காரணமாக ஜேசிபி இயந்திரங்கள் அனைத்தும் அந்தியூர் அண்ணாமடுவு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த போராட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) வரை 3 நாட்கள் நடைபெறுவதாக சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Next Story
ai in future agriculture