ஈரோடு மாவட்டத்தில் ஜமாபந்தி: மே.22ம் தேதி முதல் தொடக்கம்!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் ஜமாபந்தி வரும் மே.22ம் தேதி முதல் தொடங்குகிறது.
ஈரோடு மாவட்டத்தில் 1434ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி ஈரோடு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து வட்டங்களிலும் வரும் மே.22ம் தேதி முதல் தொடங்கப்பட்டு 29ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
அதன்படி, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் மற்றும் பெருந்துறை ஆகிய வட்டங்களில் 22ம் தேதி முதல் 29ம் தேதி வரையிலும், அந்தியூர் வட்டத்தில் 22ம் தேதி முதல் 28ம் தேதி வரையிலும், பவானி, நம்பியூர், ஈரோடு, மொடக்குறிச்சி, மற்றும் கொடுமுடி ஆகிய வட்டங்களில் 22ம் தேதி முதல் 27ம் தேதி வரையிலும் நடைபெற உள்ளது.
அதேபோல், தாளவாடி வட்டத்தில் 22ம் தேதி அன்றும், (சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் மற்றும் திங்கள்கிழமை நீங்கலாக) அந்தந்த வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற உள்ளது. எனவே, பொது மக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அந்தந்த வருவாய் தீர்வாய அலுவலர்களிடம் சமர்ப்பித்து உரிய நிவாரணம் தேடிக்கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu