ஈரோட்டுக்கு வந்த 13 பேர் தனிமைப்படுத்தி கண்காணிப்பு
பைல் படம்.
இதுகுறித்து சுகாதாரத் துறையினர் கூறியதாவது:
ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் ஒரு வாரம் தனிமைப்படுத்தி அவர்களை தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஈரோட்டுக்கு நேற்று ஒரே நாளில் பல்வேறு வெளிநாடுகளில் இருந்து 13 பேர் விமானம் மூலம் கோவை, திருச்சிக்கு வந்தனர். அங்கு அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் நெகட்டிவ் என முடிவு வந்தது. ஆனாலும் அவர்கள் தங்கள் வீடுகளில் ஒரு வாரம் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து போஸ்ட்வானா, ஹாங்காங், சீனா, இஸ்ரேல், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூர், பிரேசில், வங்களாதேசம், மொரிசியஸ் ஆகிய நாடுகளிலிருந்து வரும் நபர்களுக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் ஏதும் இருப்பின் உடனடியாக அருகில் இருக்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது மாவட்ட ஒருங்கிணைந்த கட்டளை மையம் தொலைபேசி 8056931110 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும். ஒமைக்ரான் உருமாறிய கொரோனா தொற்றின் பாதிப்புகளை தடுக்க கொரோனா தடுப்பூசி மட்டுமே சிறந்த ஆயுதம் என்பதால் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu